உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் ரயில் நிலைய தண்டவாளத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமாக சூழல் நிலவியது.
உத்தரகாண்டில் தனியார் நபர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்ட 2 ஆயிரத்து 866 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பான வழக்கில் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், நில அபகரிப்பு குறித்து முறையான விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு நிலங்களை ஆய்வு செய்வதற்காக வனத்துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், வனத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரிஷிகேஷ் ரயில் நிலையத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
















