இனி ஒரு நாளைக்கு "25 மணிநேரம்" வெளியான புதிய ஆய்வு முடிவு!
Jan 14, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இனி ஒரு நாளைக்கு “25 மணிநேரம்” வெளியான புதிய ஆய்வு முடிவு!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 09:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்மை காலமாகப் புவியின் சுழற்சியின் வேகம் தொடர்ந்து குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

“இன்றைய பரபரப்பான உலகில் நாள்தோறும் நாம் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் ஏராளம் உள்ளன. இதனால், ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பதே போதவில்லை. ஒருநாளைக்கு குறைந்தது ஒருமணிநேரமாவது அதிகம் இருந்தால் நன்றாக இருக்கும்” என நம்மில் பலர் நினைத்திருக்கலாம். அத்தகையவர்களுக்காக ஒரு நல்ல செய்தியை விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் ஒருநாள் என்பது நீண்டதாக இருக்கும் எனவும், ஒருநாளின் 24 மணிநேரம் என்பது 25 மணிநேரமாக மாறும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதற்கான காரணத்தை பார்ப்பதற்கு முன்னால், பூமியின் ஒருநாள் என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை முதலில் பார்க்கலாம். பொதுவாக பூமி தன்னைத்தானே சுற்றிவர ஆகும் காலம் 24 மணிநேரம் எனவும், அதுவே ஒரு நாளாகக் கணக்கிடப்படுகிறது எனவும் பலர் நினைக்கின்றனர். ஆனால், நமது புரிதலுக்காகக் கூறப்பட்ட ஒரு எளிய விளக்கம்தான் இது.

உண்மையில் ஒருநாள் என்பது பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படுகிறது. வான்வெளியில் உள்ள விண்மீன் கிரகம் 360 டிகிரி சுழன்ற பின், மீண்டும் அதே நிலையை வந்தடைய சுமார் 23 மணிநேரம் 56 நிமிடங்கள், 4 வினாடிகள் ஆகிறது. இதனை, ஒரு நட்சத்திர நாள் என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டும் ஒருநாளை கணக்கிடலாம்.

அதேபோல், சூரியனை அடிப்படையாகக் கொண்டும் ஒரு நாள் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒரு நாளின் மதியத்தில் இருந்து அடுத்த நாளின் மதியம் வரையிலான கால அளவு, ஒரு சூரிய நாள் எனப்படுகிறது. இது, வருடம் முழுவதும் ஒரே மாதிரி இருக்காது. உதாரணமாக, ஜூலை மாதத்தில் இது 23 மணிநேரம் 59 நிமிடங்களாகவும், டிசம்பர் மாதத்தில் 24 மணிநேரம் 30 வினாடிகளாகவும் இருக்கும். இவ்வாறு மாறியபடியே உள்ள சூரிய நாளின் சராசரி 24 மணிநேரம்.

இதனை அடிப்படையாகக் கொண்டும் நாம் ஒருநாளை கணக்கிடலாம். இந்த ஒருநாள் என்பதுதான், எதிர்காலத்தில் 25 மணிநேரமாக மாறவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் சுழற்சியை லேசர் கதிர்வீச்சுகள், ரேடியோ சிக்னல்கள் உள்ளிட்டவற்றை கொண்டு ஆய்வு செய்ததில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. சந்திரனின் ஈர்ப்பு விசை இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

நிலவின் ஈர்ப்பு விசையால்தான் கடல்களில் அலைகள் உருவாகின்றன என்பது அனைவரும் அறிந்த செய்திதான். இந்த அலைகள் ஒருவித உராய்வை ஏற்படுத்திப் பூமியின் சுழற்சி வேகத்தைக் குறைத்து வருவதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. அத்துடன் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களும் பூமியின் சுழற்சியைக் கட்டுப்படுத்துகின்றன. இது குறித்து 120 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு நாசா ஆய்வு மேற்கொண்டது.

அதில், கடந்த 100 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகுவது, நிலத்தடி நீர்மட்டம் குறைவது, கடல் மட்டம் உயர்வது போன்ற அசாதாரண மாற்றங்களின் வேகம் அதிகரித்தது தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து spin axis எனப்படும் புவியின் சுழல் அச்சில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், பூமியின் சுழற்சி வேகம் குறைந்து ஒரு நாளின் நீளம் 24 மணிநேரத்தில் இருந்து 25 மணிநேரமாக மாறக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

எல்லாம் சரி… ஒரு நாளைக்கு 25 மணிநேரம் என்ற இந்த மாற்றம் எப்போது ஏற்படும் என்ற கேள்வி எழலாம். 2026ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதலே இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்க முடியாது. இதற்கு பல மில்லியன் ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 200 மில்லியன் ஆண்டுகள், அதாவது 200 கோடி ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுவரை, ஒரு நாளைக்கு 24 மணிநேரம்தான் இருக்கும். இந்த கால அளவுக்குள்தான் நாம் நமது அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும். வேறு வழியே இல்லை.

Tags: news24 hoursA new research finding reveals that a day now has "25 hours"earth time
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூரில் நூர்கான் விமானத்தளம் கடும் சேதம் – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!

Next Post

புதிய சிக்கலில் பாகிஸ்தான் : பொருளாதார சீரழிவால் அதிகரிக்கும் புலம்பெயர்வு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies