திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கியது. பகல் பத்து உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர்.
பரமபதவாசல் திறப்பையொட்டி ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரத்தில் புறப்பட்ட ரங்கநாதர் பரமபதவாசலை கடந்து சென்றார். இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பரமபதவாசலை கடந்து சென்று வழிபட்டனர்.
















