சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட வழக்கில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்கக் கவசங்கள், பராமரிப்பு பணிக்காக 2019ம் ஆண்டு கழற்றப்பட்டன. பின்னர் ஒப்படைக்கும்போது தங்கக் கவசங்களின் எடை, 4 புள்ளி 54 கிலோ அளவுக்கு குறைந்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
இவ்வழக்கில் உன்னிகிருஷ்ணன் போத்தி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
















