நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், ஏடிஎம் பயன்பாடு குறைந்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் யுபிஐ போன்ற டிஜிட்டல் முறைகளுக்கு மாறியுள்ளதால், ரொக்கமாக பணத்தை செலவிடுவது குறைந்துள்ளதாகவும் இதனால் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் உள்ள வங்கிகள் தங்களது ஏடிஎம் கிளைகளை மூடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், புதிய வங்கி கிளைகளின் எண்ணிக்கை 2 புள்ளி 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறிய ரிசர்வ் வங்கி, தற்போது நாடு முழுவதும் மொத்தம் ஒரு லட்சத்து 64 ஆயிரம் வங்கி கிளைகள் உள்ளதாக கூறியுள்ளது.
















