திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது அறிவாலயத்தை முற்றுகையிட வந்த தூய்மை பணியாளர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை தேடி, தேடி வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
















