வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி கலிதா ஜியா உயிரிழந்தார். அவரது மறைவு கட்சித் தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மறைவு வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியா – வங்கதேச உறவை மேம்படுத்த கலிதா ஜியா மிக முக்கிய பங்காற்றி இருப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
















