மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியை வலுப்படுத்த வேண்டிய நேரமிது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புவியியல் அமைப்பில் ‘சிக்கன் நெக்’ என்று அழைக்கப்படும் சிலிகுரி பகுதியை துண்டிப்போம் என்று வங்கதேசத்தின் தற்காலிக அரசு கூறி வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து ஜக்கி வாசுதேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு “நாம் சிலிகுரி பகுதிக்கு என்ன தேவையோ அதை செய்து வலுப்படுத்த வேண்டிய நேரம் இது” என்றார்.
1971-ஆம் ஆண்டிலேயே சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் தற்போது தேசத்தின் இறையாண்மைக்கே பகிரங்க அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கோழிக்கு ஊட்டமளித்து, அது ஒரு யானையாக உருவெடுப்பதற்கு அனுமதிக்க வேண்டிய நேரம் இது என்றும் சத்குரு கூறினார்.
















