வழிபாட்டு உரிமையை திமுக காலில் போட்டு மிதிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பூரண சந்திரனின் குடும்பத்தினரை சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூரண சந்திரனின் தற்கொலைக்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு எனவும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் மரியாதை எனவும் தெரிவித்தார்.
பூரண சந்திரனின் உயிரிழப்புக்கு ஆறுதல் கூட சொல்லாத திமுக அரசுக்கு, வரும் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
















