தஞ்சை மாவட்டம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது மனைவியுடன் கும்பகோணத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் கோயிலில் அவர் மனமுருகி வழிபாடு நடத்தினார். இதையடுத்து கோயிலின் சிற்பக்கலைகள் குறித்து தொல்லியல்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
















