புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் நோக்கி பயணித்த போது முன்னாள் சென்ற டிப்பர் லாரியை ஆம்னி பேருந்து முந்த முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது டிப்பர் லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து சம்பவ இடம் சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்
















