கோவை மாவட்டம் கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளதால், மக்கள் வீட்டை வெளியேற முடியாத சூழல் நிலவுகிறது.
கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் தெருநாய்கள் கூட்டமாகத் திரிவதால், வீட்டை விட்டே வெளியேற முடியாத சூழல் நிலவுவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் 12-க்கும் மேற்பட்டோர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
கோட்டூர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















