திமுக ஆட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பு சீர்குலைந்து விட்டதெனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளி சரமாரியாகத் தாக்கப்பட்டதன் காயம் ஆறுவதற்கு முன்பு, மற்றொரு நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
திருத்தணியை சேர்ந்த தொழிலதிபர் ஜமால் மீது ஒரு கும்பல் சரமாரித் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, கடந்த சில ஆண்டுகளாகவே, திமுக ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பு சீர்குலைந்து விட்டதாக விமர்சித்துள்ள அவர், திமுக தன் தோல்வியை ஒப்புக்கொள்ள, இன்னும் எத்தனை சூரஜ்களும், ஜமால்களும் துன்பப்பட வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
















