உதகை வந்தடைந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக உதகை சென்றுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றடைந்த ஆளுநர், அங்கிருந்து கோத்தகிரி சாலை மார்க்கமாக உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்தார்.
அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பூங்கொத்துக் கொடுத்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வரவேற்றார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா உடன் இருந்தார். உதகையில் தங்கி ஓய்வெடுக்கும் ஆளுநர் வரும் 3ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ள நிலையில், ஆளுநரின் வருகையையொட்டி உதகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















