ஹைதராபாத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாகக் காவல்துறையினர் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஹைதராபாத் தெற்கு மண்டல துணை ஆணையர் (DCP) கரே கிரண் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பொது அமைதியைப் பேணவும் நகரத்தின் முக்கிய வீதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடுதல், பெண்களுக்கு இடையூறு போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.
















