நாட்டின் வளர்ச்சிக்காக அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு திட்டங்கள் உருவாக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் வளர்ச்சிக்காக அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு திட்டங்கள் உருவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நாசிக், சோலாப்பூர் – அகால்கோட் இடையே ஆறுவழி பசுமைச்சாலை அமைக்க ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிரதமரின் கதி சக்தியின் ஒருபகுதியாக இந்த திட்டத்தால் பயண நேரம் வெகுவாக குறைவதுடன், மேற்கு முதல் கிழக்கு பகுதி வரையிலான இணைப்பு வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















