உலகில் முதலாவதாக கிரிபாட்டி தீவு ஆங்கில புத்தாண்டு பிறந்தது. கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளும் ஆங்கில புத்தாண்டை கோலகல கொண்டாட்டத்துடன் வரவேற்றுள்ளன.
சூரியன் முதலில் உதயமாகும் பசுபிக் தீவான கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு முதலில் பிறந்தது. பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறப்பையொட்டி நடத்தப்பட்ட கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.
அதன் தொடர்ச்சியாக நியூசிலாந்தில் ஆங்கில புத்தாண்டு பிறந்தது.. ஆக்லாந்து நகரின் மையப்பகுதியில் புத்தாண்டுக்கான கவுண்ட்டவுன் முடிந்ததும், ஸ்கை டவரில் இருந்து கண்கவர் வாணவேடிக்கை வானில் வர்ணஜாலம் காட்டின. அப்போது குதூகலித்த நியூசிலாந்து மக்கள் ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாணவேடிக்கை நடத்தப்பட்டது. சிட்னி ஹார்பர் பாலத்தில் நடத்தப்படட வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் இரவை பகலாக்கின.
இதேபோன்று பல்வேறு நாடுகளிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
















