CONTENT CREATER-களுக்கு யூடியூபை விட அதிக ஊதியம் வழங்க X நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார். இது படைப்பாளர்களுக்கு புத்தாண்டு பரிசாகவே பார்க்கப்படுகிறது. எலான் மஸ்க் என்ன சொன்னார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்…
X தளத்தில் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்கின் பதிவுதான் தற்போது டிரெண்டாகி வருகிறது…
Content Creater-கள் யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருமானத்தையும் ஈட்டி வருகின்றனர்… அந்த வகையில் யூடியூப் உடன் ஒப்பிடும்போது, X தளம் தரும் ஊதியம் Content Creater-களுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதால், அவர்கள் X தளத்தை விட அதிக ஊதியம் தரும் தளங்களை நாடிச் செல்கின்றனர்…
இந்த சூழலில்தான் Content Creater-களை கவர்ந்திழுக்கும் வகையில், சூடான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் எக்ஸ் தள நிறுவனர் எலான் மஸ்க்…. படைப்பாளர்களுக்கு குறைவான ஊழியம் வழங்குவதை ஒப்புக்கொண்ட மஸ்க், யூடியூப் உடன் போட்டியிட ஊதியத்தை அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக பதிவிட்டுள்ளார்.
படைப்பாளர்களுக்கு அதிக ஊழியம் வழங்க வேண்டும் என்ற எக்ஸ் தள தயாரிப்பு தலைவரான Nikita Bier-ன் ட்வீட்டுக்கு பதிலளித்த மஸ்க் இதனை தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலித்தனமான content-களுக்கு மத்தியில், டிஜிட்டல் தளங்கள் அசலான, மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வ content-களை தக்க வைத்துக் கொள்ள போட்டியிடுகின்றன.
இந்த தருணத்தில் அசல் படைப்பாளர்களுக்கு ஊதியத்தை வாரி வழங்கும் வகையில் எலாஸ் மஸ்க்கின் பதிவு அமைந்துள்ளது.
இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இது ஆச்சரியமானது என்று கூறியுள்ள பயனர் ஒருவர், இதுவரை X தளம் YouTube Ad sense உடன் போட்டியிட முடியவில்லை என்றார்.
எனினும் தணிக்கை இல்லாமல் வெகுஜனங்களால் வீடியோக்களைப் பகிரவும் பார்க்கவும் இது மிகவும் பயனுள்ள தளம் என்று கூறுகிறார். படைப்பாளர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கும் தளங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வ CONTENT-களுடன் எஞ்சியிருக்கும் என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.
மைக்ரோ பிளாக்கிங் தளத்தை மஸ்க் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து கையகப்படுத்திய பிறகு, X இல் The creator monetisation programme அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் அளவீடுகளின் அடிப்படையில் விளம்பர வருவாயில் ஒரு பங்கைப் பெற அனுமதித்தது.
அதே நேரத்தில் எலான் மஸ்கின் தற்போதைய கருத்து, படைப்பாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகவே கூறப்படுகிறது… இது பலனளிக்கும் திட்டம்தானா என்பது வரும் நாட்களில் தெரியவரும்….
















