சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பாக இடைநிலை ஆசிரியர்கள் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
















