படுக்கை வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை விரைவில் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், கவுஹாத்தி – கொல்கத்தா இடையே முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடங்கும் என்றும், இதன் கட்டணம் தோராயமாக 2 ஆயிரத்து 300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், புல்லட் ரயில் சேவை 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
















