டிசம்பரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது, குறிப்பாக UPI மற்றும் RuPay போன்ற உள்நாட்டுத் தளங்கள் மூலம் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குகின்றன.
இது பணமில்லா சமூகத்தை நோக்கிய பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில், கடந்த டிசம்பர் மாதத்தில் 28 லட்சம் கோடியும், ஒரு வருடத்தில் 300 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனையும் செய்யப்பட்டுள்ளது.
















