செனாப் பள்ளத்தாக்கில் பாதுகாப்பை பலப்படுத்த முனைப்பு : காஷ்மீர் மக்களுக்கு கொரில்லா பயிற்சியளிக்கும் ராணுவம் - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 12:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செனாப் பள்ளத்தாக்கில் பாதுகாப்பை பலப்படுத்த முனைப்பு : காஷ்மீர் மக்களுக்கு கொரில்லா பயிற்சியளிக்கும் ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு மன உறுதியை வழங்கும் வகையில் இந்திய ராணுவம் கொரில்லா போர்முறை பயிற்சிகளை வழங்கி வருகிறது. பெண்கள் உட்பட கிராம மக்களுக்கு இந்திய இராணுவம் எவ்வாறு பயிற்சி அளிக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்…

ஜம்மு காஷ்மீரில் செனாப் பள்ளத்தாக்கில் உள்ள கிராமங்கள், காடுகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளன. அங்கு பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்த நிலையில், பாதுகாப்புப் படையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தோடா மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு நமது ராணுவம் கொரில்லா போர் முறையிலான அடிப்படை பயிற்சிகளையும் வழங்கி வருகிறது….

தோடா – சாம்பா எல்லையில் உள்ள 17 தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த 150 கிராம பாதுகாப்பு காவலர்கள், பெண் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பயிற்சியில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். தானியங்கி ஆயுதங்களை கையாளுதல், அடிப்படை போர் பயிற்சிகள, தற்காப்பு, பதுங்குக் குழி கட்டுமானம், பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளுதல் போன்றவற்றில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

தோடா மாவட்டத்தில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷிங்கினி கிராமத்தில் இந்தப் பயிற்சியானது அளிக்கப்படுகிறது. தங்களது கிராமங்களை பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல் ஆளாக நிற்கும் துணிவை ஏற்படுத்துவதுமே இந்த பயிற்சியின் நோக்கம் என்று ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக, தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில், செனாப் பள்ளத்தாக்கின் உயர் பகுதிகளில், ராணுவம், காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்த முயற்சி நிறைவு செய்யும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் வழங்கப்பட்ட பயிற்சி VDG உறுப்பினர்களிடையே மன உறுதியை அதிகரித்துள்ளது. ஆயுத பயிற்சி பெறும் பொதுமக்கள், தங்களுக்கு வழங்கப்படும் பயிற்சி ஊக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறுகின்றனர்.

அத்துடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நடவடிக்கைகளுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். 1990ம் ஆண்டுகளில் இங்கு அடிக்கடி நடந்த பயங்கரவாத தாக்குதல்களை நினைவுகூர்ந்த பொதுமக்கள், அதிக தானியங்கி ஆயுதங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

ஊதியம் பெறாத VDG உறுப்பினர்களுக்கு கௌரவ ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறிய பொதுமக்கள், கிராமங்களில் பதுங்கு குழிகள் கட்டுவது குடியிருப்பாளர்களிடையே பயத்தைக் குறைக்க உதவியுள்ளது என்றும் கூறுகின்றனர்.

பயங்கரவாத குழுக்களுக்கு உள்ளூர் ஆதரவு தளத்தை மறுத்து, பிராந்தியத்தில் நீடித்த அமைதியை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று கூறப்படும் நிலையில், இத்தகைய பயிற்சி எல்லை பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Terrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.jammu Kashmir terro attackOperation Sindooroccupied KashmirIndiaPahala attackpakistanstrengthen security in the Chenab Valley:lashkar e taibaguerrilla training to the people of KashmirPoK
Share
Tweet
SendShare
Previous Post

டிசம்பரில் புதிய உச்சத்தை எட்டிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை!

Next Post

சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரிய டெட் தேர்ச்சி பெறாதவர்களை பணிநியமனம் செய்யும் அரசாணை வெளியீடு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies