சம வேலைக்கு சம ஊதியம் கோரி 7-வது நாளாக போராட்டம் நடத்திய ஆயிரத்து 180 இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 7-வது நாளாக எழும்பூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆசிரியர்களை குண்டுகட்டாக கைது செய்தனர். இந்த நிலையில், போராட்டம் நடத்திய ஆயிரத்து 180 இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி கூடுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
















