தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்கள் பிரச்னையை கையில் எடுக்காமல் தமிழ்நாடு காங்கிரஸில் சுயநல அரசியல் நடைபெறுவதாகவும் தமிழ்நாடு காங்கிரசில் தொடரும் உட்கட்சி பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறிய அவர், இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தொண்டர்கள் அனைவருக்கும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ராகுல்காந்தியின் தன்னலமற்ற கொள்கைப் பிடிப்பு, துணிச்சலான அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது எனவும், அவரது கடின உழைப்பிற்கும்,ஒப்பற்ற தியாகத்திற்கும் துரோகம் செய்ய கூடாதெனவும் ஜோதிமணி தனது பதிவில் கூறியுள்ளார்.
















