சிவகங்கை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் மது அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நான்கு மருத்துவர்களும், ஆறு செவிலியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 31ம் தேதி இரவில் விபத்து ஏற்பட்டு, ஒருவர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அந்த நேரத்தில் யாருமே இல்லாத நிலையில், மருத்துவர் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு பாதி குடித்த மது பாட்டிலும், உணவுப் பொட்டலங்களும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது. இந்நிலையில், இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என மருத்துவர்கள் தரப்பில் அளித்துள்ள விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















