ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லிம் வீரர் என்ற பெருமைக்குரியவர்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் முதல்முறையாக சிட்னி திடலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கவாஜா, ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 87 டெஸ்ட், 40 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 8 ஆயிரத்து ஒரு ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்ம் இன்றி தவித்து வரும் கவாஜா தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
















