திருப்பரங்குன்றம் மலையில் பிராணிகளை பலியிடவும், மாமிச உணவு கொண்டு செல்லவும், அசைவம் சமைக்கவும் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாணிக்கமூர்த்தி தொடர்ந்த மனு, உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘சந்தனக்கூடு விழாவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்க மாட்டோம் என அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
விலங்கு பலியிடுதல், இறைச்சியை எடுத்துச் செல்லுதல், அசைவ உணவு தயாரித்தல் மற்றும் எந்தவொரு அசைவ உணவையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாது எனவும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, சந்தனக்கூடு விழாவில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்த நீதிபதி,
கந்தூரி போன்ற விழாக்கள் நடத்தவும், கால்நடைகளை பலியிடவும், மாமிசம் சமைக்கவும் தடை விதித்து உத்தரவிட்டார்.
















