சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகளிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
இந்த வழக்கில் பொன்னை பாலு, திருவேங்கடம் உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர். இந்நிலையில், பொன்னை பாலு மற்றும் மணிவண்ணன் தரப்பினருக்கும், புதூர் அப்பு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. உதவி ஜெயிலர் திருநாவுக்கரசு மற்றும் சிறை காவலர்கள் விரைந்து சென்று கைதிகளைப் விலக்க முயன்றனர்.
அப்போது உதவி ஜெயிலர் திருநாவுக்கரசைப் பிடித்து அந்த கும்பல் கீழே தள்ளியதால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து, கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு மோதலில் ஈடுபட்ட கைதிகளை அப்புறப்படுத்தினர்.
















