ஆருத்ரா தரிசன விழா - சிதம்பரம் நடராஜர், நெல்லையப்பர் உள்ளிட்ட கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆருத்ரா தரிசன விழா – சிதம்பரம் நடராஜர், நெல்லையப்பர் உள்ளிட்ட கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 3, 2026, 12:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி
நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரில் இருந்து புறப்பட்ட சுவாமிகள், கோயில் வளாகத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் என அழைக்கப்படும் ராஜ சபைக்கு கொண்டு வரப்பட்டன.

இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நடராஜ மூர்த்திக்கும் சிவகாம சுந்தரிக்கும் பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசன திரவியங்களால் மகாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நடராஜர் பெருமானுக்கு ஸ்வர்ணாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது கோயில் வளாகத்தில் குவிந்திருந்த பக்தர்கள் சிவசிவா என கைகளை கூப்பி மனமுருகி வழிபட்டனர். மகா அபிஷேகத்தை காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிவனடியார்கள் குவிந்ததால் கோயில் வளாகம் நிரம்பி வழிந்தது.

இதேபோல் சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி தியாகராஜ சுவாமி கோயில் மண்டபத்தில் அதிகாலை நடராஜர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனை தொடர்ந்து, சப்பரத்தில் எழுந்தருளிய நடராஜர், கோயில் உட்பிரகாரத்தில் 3 முறை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர், நடராஜர் முகத்தை துணியால் மறைத்து கொண்டு வெளியேறும் தறுவாயில் கதவு அடைக்கப்பட்டு, மீண்டும் அவர் சன்னதி திரும்பும் வைபவமும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசன பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெல்லை டவுன் பகுதியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் கடந்த 26ஆம் தேதி ஆருத்ரா தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலையில் தாமிர சபையில் எழுந்தருளிய நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, பசு தீபாதாரனை நடைபெற்ற நிலையில், ஓதுவா மூர்த்திகள் திருவெம்பாவை பாடல்களைப் பாட நடராஜ பெருமானின் திருநடன காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவின் பகுதியில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவ கோயில்களில் ஒன்றான சங்கரநாராயண சுவாமி கோயிலில் கடந்த 25ஆம் தேதி திருவெம்பாவை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் உலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் காலை 5.10 மணிக்கு நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவில்பட்டி பகுதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது. கைலாசநாதர் கோயிலில் மார்கழி திருவாதிரை முக்கிய நிகழ்வான பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நிகழ்வு கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

அப்போது, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த நடராஜப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே உள்ள சிவகுருநாதன் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இருந்து வரவழைக்கப்பட்ட நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை காட்டப்பட்டது.

யாகங்கள் வளர்க்கப்பட்டு மேள தாளத்துடன் நடத்தப்பட்ட இந்த ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து, ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சந்தனம், வீபூதி, தேன், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், நடராஜ பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: Arudra Darshan festivalThyagaraja Swamy TempleCuddaloreChidambaram Nataraja TempleNellaiappar temple
Share
Tweet
SendShare
Previous Post

ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் – பிரதம்ர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்!

Next Post

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகளிடையே  கோஷ்டி மோதல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies