ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் - பிரதம்ர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்!
Sep 12, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் – பிரதம்ர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 3, 2026, 11:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார் என தெரிவித்தார்.

காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், வீரமும் அறிவும் ஒன்றாய் இணைந்த சிவகங்கை சீமையின் வீரமங்கை ராணி வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த நாள் இன்று என தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கென சமூகம் விதித்திருந்த கட்டுப்பாடுகளை உடைத்து அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் எடுத்த முதல் பெண் விடுதலை வீரர். ஆங்கிலேய ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட போர்க்களத்தில் நின்ற அசைக்க முடியாத தைரியத்தின் உறுதியான வரலாற்று ஆவணம் ராணி வேலுநாச்சியாரின் வாழ்க்கை என்றும் கூறியுள்ளார்.

தேச விடுதலைக்கு தன் உயிரை ஈந்த வீரமங்கையின் வீரமும் தியாகமும் தலைமுறைகளைத் தாண்டி இன்றும் என்றும் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழும் என கூறியுள்ளார்.

வீரமங்கை ராணி வேலுநாச்சியார் புகழ் ஓங்குக! இன்றைய நாளில், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வீரத்தையும் உயரிய தியாகத்தையும் போற்றி வணங்குவோம் என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில்,  ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தியாவில் முதன் முதலில் போராடிய பெண் அரசியாக திகழும் அம்மையார் வேலுநாச்சியார் அவர்கள், மிகுந்த தீரத்துடனும் வீரத்துடனும் களம் கண்டார் என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பியர்களுக்கு எதிராக மருது சகோதரர்களோடு இணைந்து போரிட்டு திருப்பத்தூர் கோட்டையை கைப்பற்றிய வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரது வீரதீர நினைவுகளைப் போற்றி வணங்குவோம் என்றும் கூறியுள்ளார்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாலை விடுத்துள்ள பதிவில், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய, முதல் இந்தியப் பெண் வீராங்கனை, மகாராணி வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த தினம் இன்று என தெரிவித்துள்ளார்.

அரசியல் அறிவும், தைரியமும், மக்கள் மீதான அக்கறையும் உடையவராகத் திகழ்ந்தவர். தமிழ் மண்ணில் பெண்கள் துணிச்சலிலும் தீர்க்கத்திலும் தலைசிறந்தவர்கள் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் வேலு நாச்சியார். அறத்திலும் மறத்திலும் சிறந்து விளங்கிய வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் புகழ் போற்றி வணங்குகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: NAINAR GREETINGSmodi greetingsannamalai greetingsl murugan greetingsRani Velu Nachiyar birth anniversary.
Share
Tweet
SendShare
Previous Post

திருவல்லிக்கேணி ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயில் நுழைவு வாயில் கட்டுமானப்பணி – சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

Next Post

ஆருத்ரா தரிசன விழா – சிதம்பரம் நடராஜர், நெல்லையப்பர் உள்ளிட்ட கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies