சென்னை நந்தனத்தில் 49ஆவது புத்தகக் காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 49ஆவது சென்னை புத்தகக்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது…
அந்த வகையில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நந்தனம் ஆவின் பாலகம் அருகிலிருந்து ஒய்எம்சிஏ மைதானம் வரை 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது….
இந்த புத்தக வாசிப்பு விழிப்புணர்வை நடை பயணத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்
















