2026ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சன்குறிச்சியில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி பகுதியில் உள்ள புனித விண்ணோற்ப தேவாலயத்தின் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில், வீரர்கள் உறுதிமொழி ஏற்றபின் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 7 சுற்றுகளாக நடைபெறும் போட்டியில் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
















