கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவிப்பு வெளியான நிலையில், சில நாள்களிலேயே படத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
இந்நிலையில் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
















