பகவான் ரமண மகரிஷியின் 146-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பகவான் ரமணரின் 146வது ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆசிரமத்தில் உள்ள ரமணர் சமாதிக்கு, பல்வேறு வகையான அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் , ஏராளமான பக்தர்கள் ரமணரின் பக்திப் பாடல்களை பாடி வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காலை முதலே அன்னதானம் வழங்கப்பட்டது.
















