சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி 9வது நாளாக போராட்டம் நடத்திய 998 இடைநிலை ஆசிரியர்கள் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர்ந்து 9வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்திற்கு முன்பாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை குண்டு கட்டாக கைது செய்தனர்.
பின்னர் அனுமதி இன்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 998 இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
















