பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்பது ஆடம்பரமல்ல, அது ஒரு மூலோபாயத் தேவை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கோவாவின் சிகாலிம் பகுதியில் உள்ள கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவன விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மாறிவரும் உலக சூழலில், இந்தியா போன்ற ஒரு நாடு தனது பாதுகாப்பிற்காக வெளிநாடுகளை சார்ந்திருக்க முடியாது என தெரிவித்தார்.’
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்பது வெறும் ஆடம்பரம் அல்ல; அது ஒரு மூலோபாய தேவை எனவும் இந்தத் தேவையை நிஜமாக்குவதில் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றி வருவதாகவும் கூறினார்.
இந்தியா ஒரு தீவிரமான கடல்சார் நாடாக உருவெடுத்து வருவதாக தெரிவித்த ராஜ்நாத் சிங், இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைத்தன்மை, ஒத்துழைப்பு மற்றும் சட்ட ரீதியான ஒழுங்கை நிலைநாட்ட இந்தியா தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
















