மகாராஷ்டிராவில் அசாதுதீன் ஒவைசி பொதுக்கூட்டத்தில் பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
அகோலா நகராட்சித் தேர்தலை முன்னிட்டு அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேச வந்த அக்கட்சி தலைவர் ஒவைசியை பார்ப்பதற்கும் செல்ஃபி எடுப்பதற்கும் தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு மேடையை நோக்கி முன்னேறினர்.
தடுப்புகளை தாண்டி செல்ல முயன்ற நிலையில் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
















