100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மசோதா மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி எங்கே போனார்? என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த டிசம்பரில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழான வேலை நாட்களை 125 ஆக அதிகரித்த மத்திய அரசு, அதன் பெயரை விபி- ஜி ராம் ஜி எனவும் மாற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 10 முதல் பிப்ரவரி 25 வரை போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், விபி – ஜி ராம் ஜி மசோதா மீதான விவாதத்தின் போது ராகுல்காந்தி பார்லிமெண்ட் வரவில்லை என கூறினார்.
மேலும், அந்த சட்டம் குறித்து பொய்களைப் பரப்புவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் எனவும் சிவராஜ் சிங் சவுகான் வலியுறுத்தினார்.
















