வெனிசுலாவின் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை மூலம், ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்து நாடு கடத்தியது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மஸ்க், வெனிசுலா மக்கள் இனி செழிப்பான வாழ்க்கையை அடைவார்கள் என தெரிவித்தார்.
மேலும், வெனிசுலா மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அந்நாட்டின் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க, தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை மூலம், ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் எனவும் மஸ்க் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மதுரோ அரசை நீண்ட காலமாக விமர்சித்து வந்த எலான் மஸ்க், 2024 தேர்தல் காலத்திலும் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
அதேபோல, எதிர்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு தனது வெளிப்படையான ஆதரவை அளித்து வந்த அவர், இயற்கை வளங்களில் செழித்த வெனிசுலா சரியான ஆட்சியில் வளர்ச்சி காணும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மதுரோ மீதான கைது நடவடிக்கைக்கு பின் மஸ்க் தனது விமர்சனங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார்.
















