சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிக்கு தேனியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் 4ம் தேதி சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தொடங்க உள்ளது.
இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆண்டிபட்டியில் தகுதி சுற்று நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் வெற்றி பெற்றனர்.
















