திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடந்த பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒயிலாட்டம் ஆடியும், நாட்டுப்புற இசையமைத்தும் கலைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள பொங்கல் பானையில் பொங்கல் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பு வழிபாடு நடத்தினார்.
முன்னதாக, திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல், எல்.முருகன் ஆகியோரும் உடனிருந்தனர். கோயிலுக்கு சென்றபோது, அங்கு திரண்டிருந்த மக்களுடன் அமித்ஷா கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
















