புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 750 ரூபாய் மதிப்பில் 4 கிலோ பச்சை அரிசி, சமையல் எண்ணெய், 1 கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பச்சை பருப்பு மற்றும் 300 மில்லி லிட்டர் நெய் ஆகிய 5 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், திலாஸ்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
















