திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு, ஒட்டுமொத்த முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி
ஒட்டுமொத்த முருக பக்தர்களின் வேண்டுதல் பலித்துள்ளது
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மிக அருமையான தீர்ப்பை இரு நீதிபதிகள் வழங்கியுள்ளனர்
காவல்துறை, அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றும் பணிகளை தேவஸ்தான நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
தீபத்தூணில் தீபமேற்றும் விவகாரத்தில் இருதரப்பினர் சண்டையிடக் கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்
இருதரப்பு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்பட்டதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்
தமிழக வரலாற்றிலேயே சிறப்புமிக்க தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது என இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் ராஜேஷ் பேட்டி
















