சென்னை அரும்பாக்கம் அருகே நடந்த வாக்கத்தான் ஓட்டப்பந்தயத்தில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சித்த மருத்துவ தினத்தையொட்டி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மத்திய சித்த மருத்துவம் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வாக்கத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சித்த மருத்துவ கவுன்சிலிங் இயக்குநர் டாக்டர் முத்துக்குமார், இணை இயக்குனர் கோமளவள்ளி ஆகியோர் கலந்து கொண்டு வாக்கத்தான் ஒட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் முத்துக்குமார், சித்த மருத்துவத்தின் பயன்பாட்டை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் சித்த மருத்துவத்திற்கு 9 கிளைகள் உள்ளது என்றும், லட்சக்கணக்கானோர் சித்த மருத்துவ சிகிச்சை முறையை பயன்படுத்தி வருவதாகவும் கூறினார்.
















