வங்கதேசத்தில் ஒரே நாளில் 2 இந்து வியாபாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
வங்கதேசத்தில் 4 இந்துக்கள் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், ஜஷோர் மாவட்டத்தின் கோபாலியா சந்தையில் பொருட்களை வாங்கி கொண்டிருந்த ராணா பிரதாப் என்பவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், படுகாயமடைந்த ராணா பிரதாப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோன்று, நரசிங்கடி மாவட்டத்தில் உள்ள சார்சிந்தூர் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும் மணி சக்ரபர்த்தி என்பவரையும் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
வங்கதேசத்தில் கடந்த 18 நாட்களில் 6 இந்துக்கள் கொல்லப்பட்ட சம்பவம் அங்குள்ள இந்துக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
















