கரும்பு கொள்முதலுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை வழங்க வேண்டுமென கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளிடம் நேரடியாக கரும்பை கொள்முதல் செய்யவும், கரும்பு ஒன்றுக்கு 38 ரூபாய் வழங்கவும் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், கரும்பை கொள்முதல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கிருஷ்ணகிரியில் கரும்பை குறைந்த விலைக்கு அதிகாரிகள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள், அரசு நிர்ணயித்த விலைக்கே கரும்பை கொள்முதல் செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
















