தமிழக தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள சூழலில், அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும், பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா உள்ளிட்டாரும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பில் கூட்டணி உறுதியானதுடன், தொகுதி எண்ணிக்கையும் முடிவு செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துசென்ற நிலையில் பாமக இணைந்திருப்பது, கூட்டணிக்கு மேலும் வலு சேர்த்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
















