தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய வீடியோ வைரலான நிலையில், அலட்சியமாக நடந்துகொண்ட செவிலியர் ரஞ்சிதாவை நிரந்தர பணி நீக்கம் செய்து மருத்துவமனை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள், நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
அங்குள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டடத்தில், புற்றுநோய்க்காக சிகிச்சை பெற சென்ற நோயாளிகளை பணியாளர்கள் அலட்சியமாக கையாளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், அங்குள்ள செவிலியர் ரஞ்சிதா, நோயாளிகளை தனது இருக்கைக்கே வரவழைத்து குளுக்கோஸ் செலுத்தி, உறவினர்கள் கையில் குளுக்கோஸ் பாட்டிலை எடுத்து செல்ல வைக்கும் அவலம் அரங்கேறியது.
நோயாளிகளை நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய வீடியோ வைரலான நிலையில், அலட்சியமாக நடந்துகொண்ட செவிலியர் ரஞ்சிதாவை நிரந்தர பணி நீக்கம் செய்து மருத்துவமனை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
















