திருப்பரங்குன்றம் வழக்கில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு
பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டம்
திருப்பரங்குன்றம் வழக்கில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்கிற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், புதுச்சேரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜா தியேட்டர் சந்திப்பில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் ஒன்று கூடி அரோகரா கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
















