திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, சர்வதேச கிட்னி திருட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளது எனும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரை சேர்ந்த விவசாயி ரோஷன் குதே என்பவர் கந்துவட்டி கும்பலிடம் சிக்கி, கடனை அடைக்க தனது சொத்துகள் மட்டுமின்றி, கிட்னியையும் பறிகொடுத்துள்ளார். பின்னர், கிட்னியை இழந்த ரோஷன் குதே, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துரிதப்படுத்தியது.
இந்த விசாரணையில் திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனை கிட்னி திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஏழைகளிடமிருந்து பறிக்கப்பட்ட கிட்னிகள் திருச்சி மருத்துவமனைக்கு கைமாறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருச்சி மருத்துவமனையை சேர்ந்த சம்பந்தப்பட்ட மருத்துவர்களை விரைவில் போலீசார் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
















